வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் கற்பிட்டி 90 ஏக்கர் சலாமாபாத் நலன்புரி முகாமில் வசித்துவரும் மக்கள் மன்னார் புதுக்குடியிறுப்பை சேர்ந்தவர்கள்.
இரு தினங்களுக்கு முன்னர் இந்த கிராமத்துக்கு சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் ஹூனைஸ் பாருக்கின் ஆதரவாளர்கள், அந்தப் பிரதேசத்தில் அநாகரிகமான முறையில் செயற்பட முற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அப்பிரதேச மக்கள் இவர்களின் செயற்பாட்டினை வண்மையாக கண்டித்துள்ளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கற்பிட்டடி 90 ஏக்கர் பகுதியில் நேற்று இடம் பெற்ற விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி குறித்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;
பாராளுமன்றத் தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் வெற்றி உறுதியாகிவரும் இந்நிலையில், தமது தோல்வியினை அறிந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் தலைமையிலான சிலர் தொடராக அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது பிழையான சோடிக்கப்பட்ட கருத்துக்களையும்,வதந்திகளையும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை காட்டிக்கொடுக்கும் வகையில் செயற்படுபடுகிறார்கள்.
தேர்தல் நெருங்குகின்ற போது குழப்பங்களை விளைவிக்கும் வகையில் இவ்வாறு இடம் பெயர்ந்த மக்களுக்கு இடையில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தின் பின்னணி என்பது ஏற்கனவே திட்டமிடப்பட்டதொன்றாகவே இருந்தது என்பதை இந்த பிரதேசத்திற்கு நேற்று மாலை விஜயம் செய்து மக்களிடத்தில் கேட்கப்பட்ட போது தெளிவாகின்றது.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் எதிர் சக்திகள் கூட்டு சேர்ந்து அமைச்சரின் நகர்வுகளை தடுப்பதற்கும், அமைச்சரின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை அழிப்பதற்கும் எடுக்கப்பட்டுவரும் முயற்சியாக இந்த சம்பவத்தை காணமுடிகின்றது
அப்பாவி வாக்காளர்களை அச்சுறுத்தி அவர்களை வாக்களிப்பதற்கு தடைகளை ஏற்படுத்தும் தளத்தினை இந்த சக்திகள் மேற்கொண்டுவருவது இதன் மூலம் தெளிவாகின்றது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(riz)