(FASTNEWS|COLOMBO) – தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை பிரதி வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 12 மணி முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ரயில்வே ஊழியர்கள் இன்று(27) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கான வர்த்தமானியில், போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று(26) கைச்சாத்திட்டுள்ளார்.