மரண தண்டனையின் உறுதியால் வெலிக்கடை சிறைச்சாலையின் மரண தண்டனைக் கைதிகள் சுய நினைவற்றவர்களாக..

(FASTGOSSIP | COLOMBO) – ஜனாதிபதியினால் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலையின் செப்பல் பிரிவின் C3 அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதிகள் பெரும் அச்சமடைந்த நிலையில் காணப்பட்டதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்ற.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 84 கைதிகள் அண்மையில் புஸ்ஸ மற்றும் வட்டரெக்க சிறைச்சாலைக்கு அவசரமாக மாற்றி அனுப்பப்பட்டனர். C3 அறை திடீரென புதுப்பிக்கப்பட்டு, நிற பூச்சு பூசப்பட்டு, தூக்கு மேடை சோதனையிட்டமையினால் கைதிகள் பதற்றமடைந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்ட 200 மரண தண்டனை கைதிகள் கடும் அதிர்ச்சியடைந்து, மயங்கிவிழுந்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி பார்த்து சுதந்திரமாக நேரத்தை கழித்த சிறைக்கைதிகள் இந்த அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைக்குள்ளாகியுள்ளனர். இதுவரையில் C சிறைச்சாலையில் 26 அறைகள் வெற்றிடமாக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.