(FASTNEWS | COLOMBO) – ரயில் சேவையினை அத்தியவசிய சேவையாக பிரகடனம் செய்துள்ள நிலையில், ரயில் திணைக்களத்தின் ஊழியர்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் பொலிசில் முறைப்பாடு ஒன்றினை கையளித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதன்படி, அவசர கால சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ள ஊழியர்களுக்கு எதிராக நீதிமன்றினால் தேவையான நடவடிக்கைகள் எடுக்க எண்ணியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, பணிப்புறக்கணிப்பிடையே கண்டி, ரம்புக்கனை, மாத்தறை, காலி, மஹவை, சிலாபம் மற்றும் அவிசாவளை ஆகிய இடங்களில் இருந்து இன்று காலை 07 ரயில்கள் கொழும்பினை நோக்கிப் பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கண்காணிப்பாளர் காமினி செனவிரத்ன தெரிவித்திருந்தார்.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையின் காரணமாக நேற்று(27) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இப்போது வெற்றி நிலையில் உள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.