(FASTNEWS|COLOMBO) – தேசிய விபத்து தடுப்பு வாரம் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் இடம்பெறும்.
இதன் கீழான திட்டங்கள் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று பதில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயம் விஷேட வைத்தியர் லக்மால் கம்லத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 1 மில்லியன் பேர் விபத்துக்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் ஊனமுற்ற நிலைக்கு உள்ளாகின்றனர்.
15 தொடக்கம் 44 வயதுக்கு இடைப்பட்டவர்களின் உயிரிழப்புக்கு காரணம் திடீர் விபத்துக்கள் எனவும் இதற்கு முக்கிய காரணம் கவனக் குறைவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிடுவதாக அவர் தெரிவித்தார்.