புதிய கூட்டமைப்பை தொடர்பில் ஆராய ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு நாளை(02) கூடுகிறது

(FASTNEWS| COLOMBO) – புதிய கூட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி முன்வைத்த யோசனைகளை கண்காணிப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நியமித்த குழு நாளை(02) கூடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஆகிவற்றுக்கிடையே பல சுற்று பேச்சுவார்தைகள் முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.