இன்று(02) 09 மணிநேர நீர்வெட்டு

(FASTNEWS|COLOMBO) – பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்த பணிகள் காரணமாக காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று(02) 9 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பத்தேகம, ஹல்பதொட்ட, சந்தரவல, கனேகம, மஹகொட, நாகொட, மீ வெடும, கோனபீனுவல, தெல்வத்த, களுப்பே மற்றும் ஹிக்கடுவ ஆகிய நகரங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.