நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(FASTNEWS|COLOMBO) – சப்ரகமுவ மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதுடன் வடமேல் மாகாணத்திலும் மாத்தறை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.