(FASTNEWS|COLOMBO) – மாதம்பை பழைய நகரம் பகுதியில் அமைந்துள்ள இரும்பு சேகரிக்கும் வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்றிரவு(01) ஏற்பட்ட தீ விபத்தில் 3 பாரவூர்திகள் சேதமடைந்துள்ளன.
ஒரு பாரவூர்தி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன் இரு பாரவூர்திகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.