(FASTNEWS|COLOMBO) – பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் இந்திய அணி 28 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 40 ஆவது போட்டி பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கிடையே நேற்று பேர்மிங்கமில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 314 ஓட்டங்களை பெற்றது.
315 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 28 ஓட்டத்தினால் தோல்வியடைந்தது.
இப் போட்டியின் முடிவினால் நடப்பு தொடரில் இந்திய அணி இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதுடன், பங்களாதேஷ் அணி ஐந்தாவது அணியாக அரையிறுதிக்கான வாய்ப்பினை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.