(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மறுசீரமைப்பு நிகழ்ச்சித்ப திட்டத்தின் கீழ் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(02) ஜனாதிபதி அலுவலகத்தில வைத்து வழங்கி வைத்தார்.
அதன்படி, மொரட்டுவை தொகுதி அமைப்பாளராக திலங்க சுமதிபால, இரத்தினபுரி தொகுதி அமைப்பாளராக சட்டத்தரணி பிரியந்த கருணாதிலக, மின்னேரிய தொகுதியின் ஹிங்குரொக்கொட பிரதேச சபை எல்லைக்கான அமைப்பாளராக பீ.ஆர்.உடவத்த, எலஹெர பிரதேச சபை இணை அமைப்பாளராக ரோஹித கத்தொடுவ, கண்டி, கலகெதர தொகுதி அமைப்பாளராக லால் சிசிர பண்டார கிரிபாகம, பிபிலை தொகுதியின் அமைப்பாளராக சட்டத்தரணி ஊதார சொய்சா ஆகியோர் நியமிக்கப்படுள்ளனர்.
இதேநேரம் சில மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட அமைப்பாளர்களும் இதன்போது ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.