துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் ஜா – எல பகுதியில் வைத்து கைது

(FASTNEWS | COLOMBO) – ஜா – எல, கொட்டுகொட பகுதியில் துப்பாக்கியுடன் 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் இன்று(03), பேலியகொட மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபரை இன்று(03) வத்தளை நீதிமன்றில் முன்னைல்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது