(FASTNEWS | COLOMBO) – கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறையை மதிப்பீடு செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரினால் பெட்டிகளோ கெம்பஸ் (பிரைவட்) லிமிடட் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கட்ட அவதானிப்பு அறிக்கை தொடர்பில் அமைச்சரவை கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இந்த தெரிவுக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை மதிப்பீடு செய்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை துணை சபையொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
நிதி, நகரதிட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி, தேசிய ஒன்றிணைப்பு அரச மொழி சமூக மேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் மற்றும் அபிவிருத்தி மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை துணை சபையொன்றை நியமிக்க அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.