
சீனி அடங்கிய பானங்களுக்கு மீண்டும் வரி
(FASTNEWS|COLOMBO) – சீனி அடங்கிய பானத்திற்கு மீண்டும் வரி விதிப்பதற்கு அமைச்சரவை கவனம் செலுத்தியிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சீனி அடங்கிய பானத்திற்காக விதிக்கப்பட்டிருந்த வரி 52 நாட்கள் நிலவிய அரசியல் நெருக்கடியின் போது நீக்குவதற்கு அப்போதைய பிரதமராக குறிப்பிடபட்டிருந்த மகிந்த ராஜபக்ஷ நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.
இதனையடுத்து, சீனி அடங்கிய பானத்திற்கு மீண்டும் வரி விதிக்க சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்குவதற்காக நிதி அமைச்சு இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தொற்றா நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிதி அமைச்சில் இடம்பெறவுள்ளது.