(FASTNEWS|COLOMBO) – நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 119 ஓட்டத்தினால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு நுழைந்துள்ளது.
12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 41 ஆவது போட்டி நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று செஸ்டர்-லீ-ஸ்டிரிட் மைதானத்தில் ஆரம்பமானது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை பெற்றது.
306 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து அணி 45 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 119 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்றாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதுடன், நியூஸிலாந்து அணியின் அரையிறுதி முடிவு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் தங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.