(FASTNEWS|COLOMBO) – ரஷ்ய நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று அந்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட ஆர்ட்டிக் பகுதியின் ஆழ்கடலில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
விபத்து காரணமாக நச்சு வாயு கப்பல் முழுவதும் பரவியது. அந்த நச்சு வாயுவை சுவாசித்த 14 பேரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
கப்பலில் ஆழ்கடல் குறித்த ஆய்வினை மேற்கொள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி விபத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு பாதுகாப்பு துறை அமைச்சகத்துக்கு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.