அவிஷ்க தொடர்பில் மஹேல கருத்து

(FASTNEWS | COLOMBO) – “எதிர்வரும் நான்கு வருட காலங்களுக்கான பாடத்தினை இலங்கை அணியானது இம்முறை ஐசிசி உலகக் கிண்ண தொடரில் பாடமாக கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான சிறந்த முன்மாதிரியாக தற்போது அவிஷ்க பெர்னாண்டோ சிறந்ததொரு முன்மாதிரியாக உள்ளார்.” என முன்னாள் இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜயவர்த்தன தெரிவித்திருந்தார்.

#அவிஷ்கவை அறிந்தது..

‘‘ அவரை எனக்கு 19 வயதுக்கு உட்பட்ட போட்டிகளில் விளையாடும் காலங்களில் தான். முதல்வரிசை போட்டிகளிலாவது விளையாடாது இருந்த அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைத்தது.. அதனால் அவர் அவுஸ்திரேலியாவின் மிச்சேல் ஸ்டார்க் மற்றும் பெட் ஆகியோருக்கு முகங் கொடுக்க நேர்ந்தது.’’

#அவிஷ்கவின் திறமை

‘‘அவர் ஒரு திடமான சரிதை என ஒப்புவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆக்ரோஷமான துடுப்பாட்டத்தில் களமிறங்கினார் என்றே கூற வேண்டும். எனினும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியின் போதும் துணிச்சலாக சதத்தினை (104*) பூர்த்தி செய்தார். அவரது திறமை புதுமையில்லை. அவிஷ்கவுக்கு நிறையவே திறமைகள் இருப்பதை நாம் அறிந்திருந்தோம். ’’