உலகக் கிண்ண மகளிர் கால்பந்து – இறுதிப் போட்டியில் அமெரிக்க மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன

(FASTNEWS|COLOMBO) – பிரான்சில் நடைபெற்று வரும் பெண்கள் உலகக் கிண்ண கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

லயானில் உள்ள பார்க் ஒலிம்பிக் லயானியாஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அமெரிக்க அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நேற்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துரூபவ் ஸ்வீடன் அணிகள் மோதின. ஆரம்பத்தில் ஸ்வீடன் அணி ஆக்ரோஷமாக முன்னேறியது.

அந்த அணியின் ஜாக்கி குரோனன் 99-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்து அசத்தினார். அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இறுதியில் நெதர்லாந்து அணிரூபவ் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக உலகக் கோபபை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.