இன்று முதல் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை

(FASTNEWS|COLOMBO) – இன்று(05) முதல் ஒரு மாத காலத்துக்கு மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்வதற்காக பொலிஸார் நாடளாவிய ரீதியிலான விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கொழும்பு மற்றும் நெரிசல் மிக்க நகரப் பகுதிகளில் இந்த விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.