தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை வழமைக்கு

(FASTNEWS|COLOMBO)- கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் வழமை போல் இடம்பெறும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சேவைக்கான கணனி தொகுதி புதுபதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு மீள பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் இயக்க மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு தினங்களில் தமது விண்ணப்பங்களை கையளித்த அனைத்து விண்ணப்பதாரிகளும் இன்று முதல் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் எமவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.