மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் நவம்பரில் பூர்த்தி

(FASTNEWS|COLOMBO) – மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை அமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தி அடைந்த பின்னர் மக்களின் பாவனைக்கு திறக்கப்படவுள்ளதாக, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை – முலட்டியன பிரதேசத்தில் சமூக நீர்விநியோக செயற்றிட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

குறித்த இந்த செயற்றிடத்திற்கு 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.