(FASTNEWS|COLOMBO) – இந்தியாவின் நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 17 சதவீத நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மோசமாக உள்ளமை தெரிய வந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாட்டில் பல பகுதிகளில் கூட இப்போது தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதுடன், இதை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி நாடு முழுவதும் 255 மாவட்டங்களிலும் 1,597 வட்டாரங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் எந்தெந்த நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மோசமாக உள்ளது என்று நடத்தப்பட்ட ஆய்வில் 17 சதவீத நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பது தெரியவந்துள்ளது. அதில் தமிழ்நாடு முதலிடத்திலும், அடுத்த இடங்களில் ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்கள் இருக்கின்றன.
நாடு முழுவதும் மொத்தம் 255 மாவட்டங்களிலும், 756 நகரங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு மோசமாக இருக்கிறது.
தலைநகரம் டெல்லியும் தண்ணீர் தட்டுப்பாட்டில் உள்ளதுடன், டெல்லியை சுற்றி அமைந்துள்ள உத்தரபிரதேசம் மற்றும் அரியானா மாநில நகரங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
நகரப் பகுதிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க அனைத்து இடங்களிலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.