மீறிகம – குருநாகல் வரையிலான நிர்மாணப் பணிகள் டிசம்பரில் பூர்த்தி

(FASTNEWS|COLOMBO) – மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீறிகம தொடக்கம் குருநாகல் வரையிலான வீதியின் நிர்மாணப் பணிகள் டிசம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கான திட்டத்தில் இது வரையில் 75 சதவீதமான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக வீ.மோஹான் தெரிவித்துள்ளார்.

வீதியின் நீளம் 40 கிலோ மீற்றர் கொண்ட குறித்த வீதியில் ஐந்து நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனூடாக மேலும் பல நகரங்களுக்கு பிரவேசிக்க முடியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.