(FASTNEWS| COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சந்தேகநபரான சஹ்ரான் ஹஷீமின் நுவரெலியா ப்லேக்பூல் பிரதேச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற நிகவரெட்டிய ரஸ்னாயகபுற பிரதேசத்தினை வசிப்பிடமாகக் கொண்ட கைதாகிய ராஜ் கோபால் முதியன்சலாகே இஸ்மாயில் முஹம்மத் நசீர் (41) எனும் சந்தே நபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் கையளிக்கப்பட்டுள்ளதாக செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் கடந்த மே மாதம் 01ம் திகதி நிகவரெட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.