(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 திகதி தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று(10) பிற்பகல் 02.00 மணிக்கு கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோர் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.