இந்தியா – நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரவுள்ளது

(FASTNEWS|COLOMBO) – மழை காரணமாக நேற்று(09) இடைநிறுத்தப்பட்ட இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று(10) தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது மழை குறிக்கிட்டது. இதனால் போட்டி பாதியில் இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து இடையிலான அரையிறுதிப் போட்டி இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவித்தலுக்கு அமைவாக போட்டி இடை நிறுத்தப்பட்ட இடத்திலிருந்தே நியூஸிலாந்து – 46.4 ஓவர், 5 விக்கெட், 211 ஓட்டம் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தகவல்கள் வெளிவந்தன.