(FASTNEWS|COLOMBO) – பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை மறித்து நின்ற மாணவர்கள் சிலர் கல்விசாரா ஊழியர்கள் மீது முன்னெடுத்த தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுஜீவா அமரசேனா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று பீடாதிபதிகளுடன் கலந்துரையாடி பல்கலைக்கழகத்தைத் தற்காலிகமாக மூடுவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.