மீண்டும் ஒரு முறை எனக்கு மன்னிப்பு வழங்க முடியாது – ஞானசாரவுக்கு தொலைபேசியில் மைத்திரி அழைப்பு

(FASTGOSSIP| COLOMBO) – சிறையி­லி­ருந்து ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட்ட ஞான­சார தேரர் குறித்தும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தி­யிடம் முறையிட்டுள்ளனர்.

முஸ்­லிம்கள் மீதான கெடு­பி­டிகள் நாளாந்தம் அதி­க­ரித்து வரு­கின்­றன. நீங்கள் மன்­னிப்பு வழங்கி சிறை­யி­லி­ருந்து விடு­தலை செய்த ஞான­சார தேரர் இன்று உலமா சபையை விமர்­சித்து முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராகப் பேசி வரு­கிறார். பொய் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கிறார். ஜனா­தி­பதி என்ற வகையில் நீங்கள் இது தொடர்பில் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் இல்­லையேல் இன முரண்­பா­டுகள் மேலெழும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இத­னை­ய­டுத்து அங்­கி­ருந்­த­வாறே ஞான­சார தேரரை தொலை­பே­சி­யூ­டாக தொடர்­பு­கொண்ட ஜனா­தி­பதி, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான அவ­ரது கருத்­துக்கள் மற்றும் செயற்­பா­டுகள் தொடர்பில் தனது அதி­ருப்­தி­யினை வெளி­யிட்டார். அத்­துடன் தொடச்­சி­யாக இவ்­வாறு செயற்­பட்டால் மீண்­டு­மொரு தடவை என்னால் உங்­க­ளுக்கு மன்­னிப்பு வழங்க முடி­யாது எனவும் சுட்­டிக்­காட்­டியதாக கூறப்படுகின்றது.