தந்தையால் கர்ப்பமான மகளின் கருவை கலைக்க முடியாதாம்

கான்பூரில் தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க முடியாது, அவ்வாறு செய்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று வைத்தியர் தெரிவித்துவிட்டார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். தற்போது சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். பாலியல் பலாத்காரம் தொடர்பாக சிறுமியின் தந்தையை பொலிசார் கடந்த ஜூலை 16ஆம் திகதி கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்கவும் முயற்சி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்க முடியாது, அவ்வாறு செய்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று வைத்தியர் தெரிவித்துவிட்டார்.

பாபுபுர்வா காவல் நிலையத்தில் சிறுமியின் அண்ணன் கொடுத்த முறைப்பாட்டின் பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே நிதி பிரச்சனை காரணமாக கர்ப்பமாக உள்ள சிறுமியை பார்த்துக் கொள்ள முடியாது என்று அவரது சகோதரர் தெரிவித்து விட்டார். இதனையடுத்து சிறுமி கான்பூரில் உள்ள அரசு மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சிறுமியின் தாய் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார். அவருக்கு 3 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக விசாரணை அதிகாரி சவிதா சங்கர் பேசுகையில்,

கடந்த மாதம் 20 ஆம் திகதி சிறுமிக்கு எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் 23 வாரம் மற்றும் இரண்டு நாட்கள் கர்ப்பமாக உள்ளார் என்று தெரியவந்து உள்ளது. இதனை தொடர்ந்து சிறுமியின் சகோதரர்கள் அவருடய வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிட கோரிக்கை விடுத்தனர்.

பொலிசார் மருத்துவரை சந்தித்து அதற்கான ஏற்பாடை செய்தனர். ஆனால் மருத்துவர் சிறுமிக்கு கருகலைப்பு செய்தால், அவருடைய உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று கூறிவிட்டனர், என்று கூறி உள்ளார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றில் நடைபெற்றபோது சிறுமியின் மூத்த சகோதரர், நான் மட்டுமே வீட்டில் சம்பாதிக்கிறேன். என்னால் அவரையும் இந்த நிலையில் பார்த்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டார்.

குழந்தை பிறக்கும் வரையில் அவரை காப்பகத்தில் வைக்கவும் கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் என்னுடைய சகோதரியை நான் பார்த்துக் கொள்கிறேன்,என்று கூறிஉள்ளார் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது