(FASTNEWS|COLOMBO) – முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிடவின் மேன்முறையீட்டு மனு விசாரணையினை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(10) தீர்மானித்துள்ளது.
சில் துணி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரும் தமக்கு வழங்கப்பட்டுள்ள 03 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தனர்.
குறித்த மனு நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தர மற்றும் அச்சல வெங்கப்புலி முன்னிலையில் இன்று(10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கு தொடர்பான விளக்க அறிக்கையை ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி சமர்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் இரண்டு தரப்பினருக்கும் நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
2015ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாய் நிதியில் சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவத்தில் இருவரும் குற்றவாளிகள் என, கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.