ஷாபி வழக்கு நடவடிக்கை மதியம் 01 மணி வரைக்கும் ஒத்திவைப்பு

(FASTNEWS | COLOMBO) – குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் இன்று(11) குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் குருநாகல் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வழக்கு நடவடிக்கைகளை மதியம் 01 மணி வரைக்கும் ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அநீதம் இழைக்கப்பட்ட தரப்பினர் சார்பில் கருத்துக்களை முன்வைக்க ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட வருகை தராமை காரணமாகவே குறித்த ஒத்திவைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட தற்போது உச்ச நீதிமன்ற வழக்கொன்றில் முன்னிலையாகி உள்ளமையினால் குறித்த வழக்கினை ஒத்திவைக்குமாறு அநீதம் இழைக்கப்பட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த வழக்கு மதியம் 01 மணி வரைக்கும் ஒத்திவைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குருநாகல் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே மற்றும் வெளியே பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.