உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சிகிச்சை பெற்று வந்த யுவதி உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக றாகம மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.