அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

அரசாங்கத்திற்கெதிராக மக்கள் விடுதலை முன்னணியால்  சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் விவாதத்தின் பின் இன்று மாலை வாக்கெடுப்பு நடைபெற்றது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன.

இதன்படி 27 வாக்குகளால் பிரரணை தோற்கடிக்கப்பட்டது.