பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு ஒத்திவைப்பு

(FASTNEWS|COLOMBO)- இன்று(12) கூடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் காலை 10.30க்கு தெரிவுக்குழுவின் அமர்வு ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது, அரச புலனாய்வு சேவை பிரதானி, சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரட்ன மற்றும் அதன் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் சாட்சியமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வருண ஜயசுந்தர மற்றும் அதன் பொலிஸ் பரிசோதகரான தரங்க பத்திரண ஆகியோரும் எதிர்வரும் 24 ஆம் திகதி சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.