உலகின் பல நாடுகளில் முடங்கிய டுவிட்டர்

(FASTNEWS|COLOMBO)- சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் நேற்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் டுவிட்டர் சேவை முடங்கியது.

இதனால், டுவிட்டர் பயனாளிகள் சிரமத்திற்கு உள்ளாகினர் இது குறித்து விளக்கமளித்த டுவிட்டர், தொழில்நுட்ப காரணங்களால் வலைபக்கம் முடங்கியதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் கூறியது.

அதேபோல், சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. .

Image result for twitter outage