நடிகையை பிரிந்து வைத்தியரை மணமுடித்தார் விஜய்

(FASTGOSSIP|COLOMBO)- நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த இயக்குநர் ஏ.எல். விஜய் வைத்தியர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

நடிகை அமலாபாலை காதலித்து,இயக்குனர் விஜய் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து செய்தனர்.

விஜய் நடிகை அமலா பாலை பிரிந்த பிறகு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விஜய்க்கு மறுமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

இதையடுத்து வைத்தியர் ஐஸ்வர்யாவை விஜய் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.