ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – இன்று(15) காலை வெயாங்கொட பொலிஸ் பிரிவில், வதுரவ ரயிலுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் தந்தை (45), மகள் (11) உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வெயாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.