(FASTNEWS|COLOMBO) – கடுவளை – கொள்ளுப்பிட்டிக்கு இடையிலான 177 பேரூந்து மார்க்கத்தில் இன்று(25) இரவு 08 மணி முதல் 10 மணி வரை வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நவகமுவ, கடுவளை, கொத்தலாவலையில் உள்ள சங்கபிட்டி ரஜமஹா விகாரையின் வருடாந்த பெரஹெர காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளுக்கு அறிவித்துள்ளனர்.