கடும் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

(FASTNEWS|COLOMBO) – நேபாளத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடும் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சாரம் தடைபட்டுள்ளது. மழையால் நாட்டின் பல தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

இந்நிலையில், நேற்று வரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

இதேவேளை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி இன்று மட்டும் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.