(FASTNEWS|COLOMBO) – சுமார் 27,720 வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல், ரிதீகம பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைப்பற்றப்பட்ட சிகரெட்டின் பெறுமதி 1,386,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.