நாட்டின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(FASTNEWS|COLOMBO) – எதிர்வரும் 19ஆம் திகதி வரை தென்மேற்குப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை நிலைமையில், மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் தினைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் வடமேல் கரையோரப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.