சீனாவின் தியான்ஜின் நகரின் துறைமுக பகுதியில் உள்ள ஆபத்தான கெமிக்கல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சுமார் 17 பேர் உயிரிழந்தனர், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் தொழிற் பகுதியான தியான்ஜினின் வடகிழக்கு துறைமுக பகுதியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிவிபத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
(riz)