(FASTNEWS|COLOMBO) – ஜுலை 20 ஆம் திகதி வரை தென்மேற்குப் பகுதியிலும் மத்திய மலைநாட்டிலும் மற்றும் வடமேல், மேல், தென்மேல் மற்றும் தென் கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய மழை நிலைமையில் மேலும் அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாடு முழுவதும், குறிப்பாக மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பகுதிகளில்அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.