சில்பசேனா தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சி பிரதமர் தலைமையில் இன்று(18)

சில்பசேனா தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சி பிரதமர் தலைமையில் இன்று(18)

(FASTNEWS | COLOMBO) – விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஒழுங்குசெய்துள்ள, சில்பசேனா தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சி, கொழும்பு- பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(18) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜுவ சேனசிங்கவின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ள குறித்த கண்காட்சி, இன்று(18) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்து 4 தினங்கள் இடம்பெறவுள்ளன.

அத்துடன், கண்காட்சியின் 02ம் நாள் நிகழ்வு, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன், 03ம் நாள் நிகழ்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.