ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(FASTNEWS|COLOMBO) – அவன்காட் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணாண்டோ மற்றும் கருணாரத்ன பண்டார அதிகாரி ஏகொடவெல மற்றும் ரக்னலங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர ஆகியோரை அடுத்த மாதம் 2ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் அவன்கார்ட் சம்பவம் தொடர்பாக சிறி ஜெயவர்தன புர வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில ;நேற்று கைதான தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் செயலாளர் சமந்த திஸாநாயக்க குறித்த மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் முன்வைக்குமாறும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.