(FASTNEWS|COLOMBO) – கொழும்பு – ஐந்து லாம்பு சந்தியில் லொறி ஒன்று 7 முச்சக்கரவண்டிகளுடன் மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
லொறியின் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.