மாலிங்க குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் குடியேறுகிறார்

(ASTGOSSIP|COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஓய்வுக்கு பின்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பங்களாதேசின் கிரிக்கெட் இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது

லசித் மாலிங்க அவுஸ்திரேலியாவின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுள்ளார் எனவும் ஓய்விற்கு பின்னர் அவர் தனது குடும்பத்துடன் அங்கு குடியேறவுள்ளார் என அவரிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர் என இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

லசித் மாலிங்க தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

பங்களாதேஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் லசித் மாலிங்க ஓய்வை அறிவிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.