
விரைவில் நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதை தடுப்பதற்கு புதிய சட்டங்கள்
(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதை தடுப்பதற்கு புதிய சட்டங்கள் மிக அவசியம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த செயலமர்வு ஒன்றில் கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதற்கென நாணய சட்டம் திருத்தியமைக்கப்பட உள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் வரலாற்று ரீதியாக குறைத்து மதிப்பிடப்பட்டு வந்திருப்பதாகவும் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.