ஜனாதிபதி தலைமையில் இரு நூல்கள் இன்று வெளியீடு

(FASTNEWS|COLOMBO) – “மஹவெலிய – சங்ஹிந்தியாவே கங்காவ” (மகாவலி – நல்லிணக்க நதி) மற்றும் “95ன் பசு மஹவெலி” (95ஆம் ஆண்டின் பின்னரான மகாவலி) நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று(24) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

1995 முதல் கடந்த 15 வருட காலத்திற்குள் மகாவலி திட்டத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலான எழுத்து மூலமான வெளியீடுகள் காணப்படாத குறையினை பூர்த்தி செய்யும் வகையிலேயே மகாவலி அதிகார சபையின் தலைமையில் “95ஆம் ஆண்டின் பின்னரான மகாவலி” நூல் எழுதப்பட்டுள்ளது.

சிறந்த நீர் முகாமைத்துவ நிபுணரும் 1976 முதல் காலத்திற்கு காலம் மகாவலி திட்டத்துடன் இணைந்து செயற்பட்ட கலாநிதி எம்.யூ.ஏ.தென்னகோன் இந்நிகழ்வில் தலைமை உரையாற்றவுள்ளதுடன், மேலும் அறிஞர்கள், கலைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மகாவலி, சுற்றாடல் துறைகளுடன் தொடர்புடைய தொழில் நிபுணர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வர்.