
என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் இரண்டாவது கண்காட்சி இன்று
(FASTNEWS|COLOMBO) – புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கில் ரஜரட்ட பிரதேசங்களில் இருந்து 20,000 தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் இரண்டாவது கண்காட்சி இன்று(24) ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை கண்காட்சி அனுராதபுரம் வலிசிங்ஹ ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானத்தில் ‘என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா முன்னேற்றத்தின் முன்னோடி’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறுகிறது.